பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டில் உறுப்பு நாடுகள் அனைத்தும் பங்கேற்கும்

வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு  பொதுநலவாய அமைப்பின் 54 உறுப்பு நாடுகளும் இவ்வருடம் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம நேற்று தெரிவித்தார். ‘வெளிவிவகார அமைச்சு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பிதழ்களை அனுப்பி வைக்கும்’ எனவும் அவர் கூறினார்.

‘நாம் தற்போது பேசிக்கொண்டிருக்கும் தருணத்தில் கூட மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன’ என்றும் அமுனுகம மேலும் தெரிவித்தார். அனைத்து உறுப்பு நாடுகளையும் எமது நாட்டிற்கு வரவேற்க நாம் காத்திருக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வு அவர்களுக்கு இலங்கையில் இடம்பெற்றுவரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திகளையும் அதேபோன்று சமூக மற்றும் அரசியல் ஸ்திரத் தன்மையினை அடைந்து கொள்வதற்கான போருக்குப் பின்னரான நல்லிணக்க முயற்சிகள் மூலம் பெறப்பட்ட சமாதானம் ஆகியவற்றை நேரடியாக அவதானிக்கும் ஒரு வாய்ப்பினை வழங்குமென உறுதியாக நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏதேனும் நாடுகள் குறித்த மாநாட்டை புறக்கணிப்பதற்கு முயற்சிக்கின்றனவா, புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்திருக்கின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை கொண்ட பல்வேறு அறிககைகள் சம்பந்தமாக குறிப்பாக கனடா இவ்விடயத்தில் அக்கறையினை வெளியிட்டிருப்பது மாத்திரமல்லாது ஏனைய நாடுகளையும் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்ற வேண்டாமென வற்புறுத்தி வருவது தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்டபோது ‘ குறித்த காரணங்களின் அடிப்படையில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மாநாட்டில் தான் கலந்து கொள்வதில்லை என அவர் கூறியதாக சொல்லப்படுவதைத் தவிர கனடாவின் பங்குபற்றுகை பிரச்சனையாக இருக்காது’ என தெரிவித்தார்.

இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ள ஈராண்டுகளுக்கொருமுறை நடைபெறும் பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டு அமர்வுகளில் பங்குபற்றுவதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளும் மிகுந்த ஆர்வத்துவடன் இருக்கின்றன என நான் பூரணமாக நம்புகின்றேன். கனடாவின் பங்குபுபற்றுகை தொடர்பில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. பங்குபற்றும் மட்டத்தில்தான் பிரச்சனை இருக்கிறது.

தற்போதைய நிலையில் என்னால் கூறக்கூடியது என்னவென்றால் பங்குபற்றும் மட்டம் தொடர்பில் சாதகமான சமிக்ஞைகள் காணப்படுகின்றன.

நாம் மிக உயர்மட்ட பங்குபற்றுகையினையே எதிர்பார்க்கின்றோம். எனவும் அவர் விபரித்தார். பொதுநலவாய அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் தமது பிரதமர்களை மாநாட்டிற்கு அனுப்பிவைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் பிறிதொரு நாட்டின் மனித உரிமைகள் மேம்பாடுகள் போன்ற சில நிலைமைகள் சம்பந்தமாக அந்நாடுகள் கவனம் செலுத்துவதாக எந்த நாட்டிற்கும் சுட்டிக்காட்ட முடியும் என்றே நான் இதனைப் பார்க்கின்றேன்.

நிலைமைகள் மாற்றமைடைவதை அல்லது மேம்படுவதை அவர்கள் அவதானிக்கும்போது அதன் விளைபயன்களும் மாற்றமடையும். என்றும் அமுனுகம சுட்டிக்காட்டினார்.

அனைத்து பொதுநலவாய நாடுகளிலிருந்தும் கூட்டத்தில் பங்குபற்றுதல் சம்பந்தமாக சாதகமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர்கள் தமது நல்லெண்ணத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அமுனுகம குறிப்பிட்டார்.

பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யுமென வெளிவிவகார அமைச்சு எதிர்பார்க்கிறதா? என விவப்பட்டபோது ஐக்கிய நாடுகள் சபையின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யலாமென அமுனுகம குறிப்பிட்டார்.

குறித்த விஜயம் தனிட்டவையாகும் அவற்றை பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாட்டுடன் இணைத்து குழப்பிக்கொள்ளக்கூடாது ஏனெனில் பொதுநலவாய அமைப்பு தலைவர்கள் மாநாடு தனித்துவமான முக்கியத்தவங்களைக் கொண்டுள்ளது.

டெயிலி நியூஸ் 14.05.5013

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress | Download Free WordPress Themes | Thanks to Themes Gallery, Premium Free WordPress Themes and Free Premium WordPress Themes